இந்தியா, பிப்ரவரி 27 -- A R Murugadoss: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்த 'சிக்கந்தர்' படத்தின் டீஸர் பிப்ரவரி 27ஆம் தேதியான இன்று வெளியானது. இந்த இரண்டாவது டீஸர் சிக்கந்தர் திரைப்படம் ஒரு அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், தனது வரவிருக்கும் சிக்கந்தர் படத்தின் இரண்டாவது டீஸரை வெளியிட்டிருக்கிறார். இந்த டீஸர் ஒரு நிமிடம் 21 வினாடிகள் ஓடுகிறது.

அதில் தனது பாட்டி தனக்கு சிக்கந்தர் என்ற பெயரை வழங்கியதாகவும், தனது தாத்தா சஞ்சய் என்ற பெயரை தேர்ந்தெடுத்ததாகவும்; ஆனால், தன்னை மக்கள் ராஜா என்று அழைப்பதாகவும் சல்மான் கூறுகிறார்.

அதன் பின்னர் சிக்கந்தர் டீஸர் அதிரடி சண்டைக் காட்சிகளாக மாறுகிறது. சல்மான் கான், தனது வழக்கமான டிரேட் மார்க் ஸ்வாகர் மூலம், பல எதிர...