இந்தியா, ஏப்ரல் 5 -- தமிழ்நாடு 9.69% வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69% உண்மை வளர்ச்சி வீதத்துடன் (Real Economic Growth Rate) இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும்.

நிலையான விலைமதிப்பின்படி (அடிப்படை ஆண்டு: 2011-12), 2023-24ஆம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP), 2024-25ஆம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் ...