இந்தியா, மார்ச் 3 -- 2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மார்ச் 21ஆம் தேதி வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் முன்பண மானியக் கோரிக்கைகள், நிகழ் நிதியாண்டில் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என கூறி இருந்தார். மேலும் இந்த ஆண...