இந்தியா, பிப்ரவரி 21 -- 71வது சீனியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப்: கட்டாக்கில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் புரோ கபடி லீக் (பி.கே.எல்) நட்சத்திரங்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதால், 71 வது தேசிய கபடி சாம்பியன்ஷிப்பின் தொடக்க நாள் பல திறமைகளைக் கண்டது.

இரண்டாவது நாளான இன்று கர்நாடகா அணி 46-26 என்ற புள்ளிக் கணக்கில் உத்தரகண்ட்டை வீழ்த்தியது. ஜி பிரிவில் நடந்த மேட்ச்சில் கர்நாடகா ஜெயித்தது. தமிழ்நாடு அணி 47-35 என்ற கணக்கில் புதுச்சேரியை வீழ்த்தியது. சர்வீசஸ் அணி 70-33 என்ற கணக்கில் சத்தீஸ்கரையும், கோவா அணி 38-34 என்ற கணக்கில் ஜம்மு-காஷ்மீரையும் வீழ்த்தியது.

ராஜஸ்தான் அணி, 61-43 என்ற கணக்கில் ஜார்க்கண்ட்டையும், பஞ்சாப் அணி 46-2 என்ற கணக்கில் மேற்கு வங்கத்தையும் வீழ்த்தியது. உத்தரப் பிரதேசம் 35-19 என்ற கணக்கில் அஸ்ஸாமையும், ஹர...