இந்தியா, மார்ச் 31 -- தனுஷுடன் அனேகன் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குநர் கே.வி. ஆனந்த், தனது ஆஸ்தான திரைக்கதை ஆசிரியர்கள் சுபாவுடன் கூட்டணி அமைத்த படம் கவண். இந்த படத்தில் கூடுதலாக கபிலன் வைரமுத்துவும் திரைக்கதை உருவாக்க பணியில் இணைந்தார்.

அரசியல் த்ரில்லர் படமான இதில் கே.வி. ஆனந்த் - விஜய் சேதுபதி முதல் முறையாகா கூட்டணி அமைத்தனர். தமன்னா ஹீரோயினாக நடிப்பதக இருந்து பின்னர் கால்ஷீட் பிரச்னையால் மடோனா செபாஸ்டீன் கதாநாயகியாக கமிட்டானார். கே.வி. ஆனந்த் இயக்கிய அயன் படத்தில் வில்லனாக மிரட்டிய ஆகாஷ்தீப் சைகல் தமிழில் மீண்டும் இந்த படத்தில் கம்பேக் கொடுத்தார்.

மற்ற இயக்குநர்கள் இயக்கத்தில் நடிப்பதை பொரும்பாலும் தவிர்ப்பதுடன், தான் இயக்கும் படங்களில் மட்டுமே நடிப்படை வழக்கமாக்கி கொண்டிருந்தார் நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர். இயக்குந...