இந்தியா, ஜூன் 24 -- நடிகர் ஸ்ரீகாந்த் மீது 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்கள் பின்வருமாறு: -

NDPS 8c சட்டம் - போதைப்பொருளை தொடர்ந்து பயன்படுத்தியதோடு, அதனை வைத்திருத்தல்,

NDPS சட்டம் 22b - மிகக்குறைந்த அளவை தாண்டியும், வணிக ரீதியாக போதைப்பொருளை வைத்திருத்தல்

NDPS 29 (1) குற்றச் செயலில் பங்கு பெற்றவர் என போதைப் பொருள் தடுப்பு சட்ட பிரிவுகள் போன்ற 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

முன்னதாக, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி கோரிக்கை வைத்தார்.

அதன்படி நீதிமன்றத்தில் அவர் கூறியதாக சொல்லப்படும் தகவலில், 'போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்து விட்டேன். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அவனை நான் கவனித்துக்கொள்ள வேண்டும். ...