இந்தியா, மே 16 -- இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆறு முதல் எட்டு வாகனங்களில் பிரிந்து வேகமாக சென்றனர். முதலில் அவர்கள் எங்கு சென்றிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. தற்போது அந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க | சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு! முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு தலைவலி!

அவர்கள் டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகள், காண்ட்ராக்டர், டாஸ்மாக் தொடர்பாக சோதனை செய்யும் அதிகாரிகளின் நண்பர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் தற்போது 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க | கைவிட்டு போன அமைச்சர் பதவி! சாதாரண எம்.எல்.ஏவாக அமலாக்கத்துறை ஆபீசில் கையெழுத்து இட்ட செந்தில் பாலாஜி...