இந்தியா, ஏப்ரல் 11 -- தமிழ் சினிமாவின் நடிகர் திலகமான சிவாஜி கணேசன், தான் நடித்த அத்தனை படங்களிலும் தனது தனித்துவ நடிப்பின் மூலம் ஏதாவது ஒரு விதத்தில் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்துவிடும் மாயாஜாலத்தை நிகழ்த்தியிருப்பார். இதை சினிமாவை ரசிக்கும் அனைவாராலும் ஆமோக்கும் கருத்தாகவே கூறலாம்.

அந்த வகையில் சிவாஜி கணேசனின் பெஸ்ட் பெர்பார்மன்ஸை ரசிகக்கூடிய படங்களில் ஒன்றாக வியட்நாம் வீடு படத்தை சொல்லலாம்.

மேடை நாடகமாக பல மேடைகளில் நிகழ்த்தப்பட்டு, பின்னர் திரைப்படமாக அதை தனது நடிப்பால் மெருகேற்றி உயரூட்டியிருப்பார் சிவாஜி கணேசன். அவருடன் இணைந்து தானும் சளைத்தவர் இல்லை என்பதை தனது அற்புத நடிப்பின் மூலம் வெளிக்காட்டியிருப்பார் பத்மினி.

சிவாஜி கணேசன் - பத்மினி ஜோடியின் சிறந்த குடும்ப சித்திரமான வியட்நாம் வீடு படத்தை பி. மாதவன் இயக்கியிருப்பார். சு...