இந்தியா, மே 26 -- பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 50வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இது குறித்து வெளியிடப்பட்டு இருக்கும் செய்தி குறிப்பில், 'தனது பாடல்களால் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்களின் பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

தமிழ் சினிமா பாடல்களை தனது எழுத்துக்களால் இலக்கியமாக்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளினில், அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்த் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக நடக்கவிருக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

மேலும் படிக்க | 'பையன் பிறக்கலன்னா 3 வது கல்ய...