இந்தியா, மே 10 -- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் பரபரத்து கொண்டிருக்கும் வேளையில், தற்போது நல்ல செய்தியாக போர் நிறுத்தப்படுவதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்திருக்கிறார்.

இந்த போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், 'நீண்ட இரவாக அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழு மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பொது அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானு...