இந்தியா, மே 8 -- தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர், நடிகராக பாக்யராஜ் பிரபலமாகி வந்த காலகட்டத்தில் வெளியாகி ரசிகர்களையும் கவர்ந்து ஹிட்டடித்த படம் விடியும் வரை காத்திரு. தமிழ் சினிமாவில் சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

பேமிலி டிராமா, காமெடி கதைகளின் மூலம் பெயரெடுத்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கினார் பாக்யராஜ். தனது பாணியில் இருந்து மாறுபட்டு க்ரைம் த்ரில்லர் கதையாக விடியும் வரை காத்திரு படத்தை உருவாக்கியதோடு, ஆண்டி ஹீரோவாக தோன்றி ரிஸ்கும் எடுத்தார்.

இதற்கு முக்கிய காரணம் இந்த படத்துக்கு முன்னர் இவர் நடித்த இன்று போய் நாளை வா படத்தில் அப்பாவியாகவும், ஹீரோயினை காப்பாற்றும் ஹீரோவாகவும் தோன்றியிருப்பார். அதேபோல் இன்று போய் நாளை வா படத்துக்கு முன் மெளன கீதங்கள் படத்தில் மனைவி மீது அன்பும், பாசமும் கொண்ட கணவ...