இந்தியா, மார்ச் 27 -- கன்னடத்தில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த சங்கர் நாக் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆட்டோ ராஜா. இந்த படம் அதே பெயரில் விஜயகாந்த் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது.

படத்தின் ஹீரோவாக வரும் விஜயகாந்த் ஆட்டோகரராகவே நடித்திருப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாட்ஷா படத்தில் ஆட்டோகாரர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன்பின்னர் ஆட்டோகாரர்கள் மீதான மரியாதை பொதுமக்களிடையை சற்று அதிகரித்தது என்றே கூறலாம்.

ஆனால் ரஜினிக்கு முன்னரே ஆட்டோகாரர் கதாபாத்திரத்தில் நேர்மையான நடித்திருக்கும் விஜயகாந்த், நடிப்பிலும் கலக்கியிருப்பார்.

காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்த சிறந்த ஜனரஞ்சக படமாக ஆட்டோ ராஜா அமைந்திருக்கும். படத்தில் ஜெய்சங்கர், சங்கிலி முருகன், தேங்காய் சீனிவாசன், வி.கே. ராமசாமி உள்பட பலரும் நடி...