இந்தியா, மார்ச் 3 -- பிரான்சின் கேன்ஸ் நகரில் 24.02.2025 முதல் 02.03.2025 வரை நடைபெற்ற "38வது கேன்ஸ் ஓபன் " சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் சாம்பியன் பட்டம் வென்றார். 6 GM, 21 IM உட்பட 25 நாடுகளை சார்ந்த 147 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் 6 சுற்றுகளில் 3 வெற்றி, 3 டிரா என 4.5 புள்ளிகளுடன் பின்தங்கி இருந்த இந்திய வீரர் இனியன் 7 மற்றும் 8 வது சுற்றில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று முதல் இடத்தை சமன் செய்தார். அதனை தொடர்ந்து இறுதி சுற்றில் சக நாட்டு வீரர் GM ப்ரனேஷ்-ஐ வீழ்த்தி GM இனியன் முதல் இடம் பிடித்தார். இந்தியாவின் IM ஆராத்யா கார்க் 2வது இடமும், தற்போதைய உலக ஜூனியர் சாம்பியன் கசக்ஹஸ்தான் வீரர் GM கஸ்ய்பேக் நோன்ஜ்ர்பேக் 3ம் இடம் பிடித்தனர்.

முன்னதாக, ப...