இந்தியா, மே 15 -- 32 Years Of Nadodi Pattukkaran: நவரச நாயகன் கார்த்திக், மோகினி, ஜெய்சங்கர், பீலி சிவம், எம்.என். நம்பியார், தியாகு, சின்னி ஜெயந்த், செந்தில் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம், நாடோடி பாட்டுக்காரன். இப்படத்தை என்.கே.விஸ்வநாதன் இயக்கியும், இசையினை இளையராஜாவும் செய்திருந்தனர். பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸானது.

வேலையில்லாத பட்டாதரி இளைஞர், சுந்தரம். தனக்கு இருக்கும் பாட்டுத் திறமையைப் பயன்படுத்தி, இசைக்குழு ஒன்றில் சேர்ந்து பாட்டுப் பாடி, சம்பாதித்து வருகிறார். அந்த இசைக்குழுவில் தேவர் அய்யா, பெரிய மதுரை, சீடன், வடிவேலு, அண்ணாமலை ஆகியோர் பணிபுரிகின்றனர். சுந்தரம் இந்த இசைக்குழுவில் சேர்ந்ததும் அவருக்கு நண்பர்கள் ஆகிவிடுகின்றனர். ஒவ்வொரு ஊருக்கும் நாடோடிகளாக சென்று, இந்த இச...