இந்தியா, மே 10 -- இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் தாக்குதல்கள் பொதுமக்கள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்கள் மே 15 வரை பொதுமக்கள் விமான நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மே 15 ஆம் தேதி காலை 5.29 மணி வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக, பாகிஸ்தானின் எல்லைகளுக்கு அருகில் அல்லது முக்கிய பாதுகாப்பு தளங்களுக்கு அருகில் அமைந்துள்ள 24 விமான நிலையங்கள் மே 10 வரை பொதுமக்கள் விமானங்களுக்கு மூடப்பட்டிருந்தன; பின்னர் அது மே 15 வரை நீட்டிக்கப்பட்டது.

"இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் தொடர்புடைய விமானப் போக்குவரத்து அதிகாரிகள்...