இந்தியா, ஏப்ரல் 24 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிபகவான் நீதிமானாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றார்.

அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்நிலையில் சனி பகவான் வருகின்ற ஜூலை மாதம் வக்கிர நிலையில் மீன ராசியில் பயணம் செய்ய உள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சனிபகவான் வக்கிர நிலை அடைகின்றார். சனி பகவானின் வக்கிர பயணம் அனைத்து ராசிகளுக்கும...