இந்தியா, மார்ச் 27 -- Sun Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றம் அல்லது நட்சத்திர மாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. சில சிறப்பான தருணங்களில் கிரகங்களின் மாற்றம் சில சிறப்பான மாற்றங்களை பன்னிரண்டு ராசிகளுக்கும் கொடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த 2025 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று நிகழ்ந்தது. அதே நாளில் கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மீன ராசிக்குச் சென்றார். சந்திர கிரகண நாளில் சூரிய பகவான் இடமாற்றம் செய்வது 100 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி 100 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திர கிரகணம் திருநாளில் சூரிய பகவான் மீன ராசியில் நுழைந்து இருப்பது அனைத்து ராசிகளுக்கும...