இந்தியா, மே 9 -- ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் 24 விமான நிலையங்களை மூடுவதை மத்திய அரசு மே 15 ஆம் தேதி அதிகாலை 5:20 மணி வரை நீட்டித்துள்ளது.

வியாழக்கிழமை, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நாளை வரை 24 விமான நிலையங்களை சிவில் விமான நடவடிக்கைகளுக்கு மூடுவதாக அறிவித்திருந்தது.

வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, ஜம்மு, பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் தற்போது மே 14ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

சண்டிகர், ஸ்ரீநகர், அமிர...