இந்தியா, பிப்ரவரி 14 -- கன்னத்தில் முத்தமிட்டல் என்பது 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம் ஆகும். முன்னணி இயக்குநர் மணிரத்னம் தயாரித்து இயக்கியது. இது சுஜாதாவின் "அமுதாவும் அவனும்" என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஆர்.மாதவன், சிம்ரன் மற்றும் பி.எஸ்.கீர்த்தனா ஆகியோருடன் நந்திதா தாஸ், ஜே.டி.சக்கரவர்த்தி, பிரகாஷ் ராஜ் மற்றும் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

படத்திற்கு ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்தார். இலங்கை உள்நாட்டுப் போரின் நடுவே தனது தாயை சந்திக்கும் ஆசை கொண்ட இந்தியப் பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்ட இலங்கைத் தமிழர் பெற்றோரின் குழந்தையின் கதைதான் இது. இது 14 பிப்ரவரி 2002 அன்று வெளியிடப்பட்டது.

இன்றுடன் இந்தப் படம் வெள...