இந்தியா, ஜூன் 8 -- அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான சு. ரவியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும் என உறுதியாகத் தெரிவித்தார். மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய அவர், தமிழக அரசியல் சூழல், அதிமுகவின் சாதனைகள் மற்றும் திமுக அரசின் தோல்விகள் குறித்து விரிவாகப் பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், எடப்பாடி பழனிசாமி, மணமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை வா...