இந்தியா, மார்ச் 4 -- நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் தளத்தில் பரபரப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். கட்சியின் முதல் மாநாட்டை முடித்த கையோடு தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையும் நடத்தி முடித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் என அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கவுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள். எத்தனை சதவிகிதம் வாக்குகளைப் பெற வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில பரபரப்பு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரசாந்த் கிஷோர் கருத்துக்க...