இந்தியா, பிப்ரவரி 2 -- தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு முழுமை பெற்று உள்ள நிலையில் பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார் ஆகியோரின் படங்களை திறந்தார்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார்.

ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக செயல்பட போவதாக தெரிவித்த அவர், அத்துடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்...