இந்தியா, ஜூன் 19 -- தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில், இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் குபேரா.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் இந்தப்படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் யூ/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இந்த தணிக்கையில் படத்தில் இருந்து கிட்டத்தட்ட 19 காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கின்றன.

இதன் மூலம் படத்தின் மொத்த நீளத்தில் இருந்து 13 நிமிடங்கள் 41 விநாடிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி பார்க்கும் போது தற்போது குபேரா திரைப்படம் 3 மணி நேரம் 1 நிமிடமாக வந்து இருக்கிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது.

சமூகத்தில் உள்ள பணக்கார, ஏழை வர்க்கத்தினருக்கு இடையே உள்ள வித்தியாசம் மற...