இந்தியா, பிப்ரவரி 1 -- தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் டி.ஆர்., என அழைக்கப்படும் டி.ராஜேந்தர். இவரது படங்களில் டைட்டில் கார்டுகள் மிக குறைவாக இருக்கும்; காரணம், பெரும்பாலான பணிகளை இவரே செய்து விடுவதால், மொத்த கிரெடிட்டும் இவருக்கே வரும்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு, இசை, பாடல், பாடகர், நடிப்பு என ஒரே ஆளாக, ஒட்டுமொத்த பணிகளையும் செய்து முடிப்பதில் டி.ஆர்.,யை மிஞ்ச வேறு யார்?

அவரது மகன் சிம்பு, உச்சத்தில் இருந்து கொண்டிருந்த 2007ஆம் ஆண்டு, திடீரென ஒரு அறிவிப்பு வந்து, தமிழ் திரையுலகையே அது புரட்டிப் போட்டது. ஆம், வீராசாமி படத்தின் அறிவிப்பு தான் அது.

2002ல் அவர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்திற்குப் பின் டி.ஆர்.,யின் புதிய பட அறிவிப்பு அது. தான் அறிமுகப்படுத்திய மும்தாஜ், அப்போது அவுட்ஆஃப் ஃபார்மில் இருந்த ...