இந்தியா, ஏப்ரல் 1 -- இந்திய மகளிர் ஹாக்கி விளையாட்டில் நட்சத்திர வீராங்கனையாக இருப்பவர் வந்தனா கட்டாரியா இதையடுத்து ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று, ஹாக்கி விளையாட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்கும் மேலான ஹாக்கி விளையாட்டு பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் 320 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள கட்டாரியா, 158 கோல்களுடன், இந்திய மகளிர் ஹாக்கி வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் வந்தனா.

இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு 33 வயதை எட்டவுள்ள இவர், வருங்கால ஹாக்கி வீராங்கனைகளுக்கு ஊக்கமளிக்கும் மரபை விட்டுச் செல்கிறார். மீள்தன்மை, அமைதியான உறுதிப்பாடு மற்றும் இந்திய மகளிர் ஹாக்கியை அதிக உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான இடைவிடாத முற்சியை மேற்கொண்ட முக்கிய ...