இந்தியா, ஜூன் 18 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் சனி பகவான் நீதிமானாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்நிலையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

சனிபகவான் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார். 138 நாட்கள் வக்கிர நிலையில் சனிபகவான் பயணம் செய்ய உள்ளார். சனி பகவானின் வக்ர நிலை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட...