இந்தியா, பிப்ரவரி 11 -- தமிழ் சினிமாவில் சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்றாகவும், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்துடன் அமைந்திருக்கும் படம் பயணம். அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற காதல், ரொமான்ஸ், பேமிலி டிராமா பாணியிலான படங்களின் இயக்கிய ராதா மோகன், இந்த படத்தை ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக்கியிருப்பார்.

த்ரில்லர் கதையாக இருந்தாலும் ராதா மோகன் படங்களில் தனித்துவமாக இருந்து வரும் கதாபாத்திரங்களின் மெல்லிய உணர்வுகளின் வெளிப்பாடு இந்த படத்திலும் இடம்பிடித்திருக்கும்.

இந்த படத்துக்கு ஜெய்பீம் பட புகழ் டி.ஜே. ஞானவேல் வசனம் எழுதியிருப்பார். தமிழில் பயணம், தெலுங்கில் ககனம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாராகி, ஒரு சமயத்தில் இந்த படம் வெளியானது. இரு மொழிகளில் ரசிகர்களை கவர்ந்து சராசரியான வசூலையும் ஈட்...