Chennai, ஏப்ரல் 29 -- கடந்த 2024 ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கோலகலமாக நடைபெற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் நடைபெற இருக்கின்றன. 2028 ஒலிம்பிக் போட்டிகள் குறித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியாகின.

இந்த பிரமாண்டமான விளையாட்டு விழாவிக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தயாராகி வருகின்றன. இதற்கிடையே 2028 ஒலிம்பிக்கில் புதிய விளையாட்டுகளாக பேஸ்பால், கிரிக்கெட், ஸ்குவாஷ் போன்றவை சேர்க்கப்பட்டன. கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பது, இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1900ஆம் ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாடப்பட இருக்கிறது. அமெரிக்காவில் நடைபெறுவதால், அங்கு மிகவும் பிரபலமான பேஸ்பால் விளையாட்டும்...