இந்தியா, ஏப்ரல் 23 -- இந்து மதத்தை பொறுத்தவரை ஏகாதசி விரதங்கள் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் மொத்தம் 24 ஏகாதசி விரதங்கள் அனுசரிக்கப்படுகின்றன. எத்தனை விரதங்கள் இருந்தாலும் அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது என்பார்கள். சிறப்பு வாய்ந்த இந்த விரதம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை ஏகாதசி வருவதுண்டு. மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த விரதங்கள் அனைத்து பாவங்களையும் நீக்கி, ஒருவரின் வாழ்க்கையில் அமைதியையும், செழிப்பையும் தரும் என்று நம்பப்படுகிறது.

அந்தவகையில் ஏப்ரல் மாதத்தில் வரக் கூடிய ஏகாதசிக்கு வருத்தினி ஏகாதசி விரதம் என்று பெயர். வருத்தினி என்றால் பாதுகாப்பது என்று பொருள். இந்த ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் பாவ மன்னிப்பு மற்றும் ஆன்மீக அமைதியை அடைவதற்க...