இந்தியா, மே 11 -- 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. வருமான வரித்துறை, விஜயபாஸ்கர் மற்றும் இந்த வழக்கு தொடர்புடைய மூன்று நபர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மே 9ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், மே 23ஆம் தேதி வழக்கறிஞர் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் மூலம் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க:- 'நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாய...