இந்தியா, ஏப்ரல் 17 -- திரிகிரக யோகம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. கிரகங்கள் இடமாறும் பொழுது மற்ற கிரகங்களோடு இணையக்கூடிய சூழ்நிலை உருவாகும். அப்போது அசுப மற்றும் சுப யோகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் மீன ராசியில் சனி சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை திரிகிரக யோகத்தை உருவாக்கியுள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாகியுள்ளது.

சனி, சுக்கிரன், புதன் உருவாக்கிய திரிகிரக யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு பணக்கார யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் க...