இந்தியா, ஏப்ரல் 23 -- கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள சித்தஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பூசாரி, கன்னட திரையுலகில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டிலும், குறைந்த காலத்திலும், நடிகர்கள், இசைக்கலைஞர்கள் அல்லது படக்குழுவினர் என யாருமின்றி ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். நரசிம்ம மூர்த்தி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது கனவு கதையை உயிர்ப்பித்திருக்கிறார். சாண்டல்வுட்டின் முதல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படம் இது ஆகும்.

மேலும் படிக்க| வீக் எண்டை அதிர வைக்க ஓடிடி பக்கம் வரும் 2 மாஸ் படங்கள்.. கொண்டாட்டத்திற்கு கவுண்டவுன் ஸ்டார்ட்..

நரசிம்ம மூர்த்தி, கிராஃபிக் டிசைனரான நூத்தனுடன் இணைந்து தனது கனவை நனவாக்கியுள்ளார். 95 நிமிடங்கள் கொண்ட இந்த கன்னட திரைப்படம் மத்திய தணிக்கை வாரியத்த...