இந்தியா, ஏப்ரல் 21 -- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பொதுத்தேர்வில் கருணை மதிப்பெண் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக அறிவியல் பாடத்தில், நான்காவது ஒரு மதிப்பெண் கேள்வியில் முரண்பட்ட வாக்கியங்கள் இருந்ததால், அந்த கேள்வியை முயற்சித்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

கூற்று: ஜோதிபா புலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார்.

காரணம்: ஜோதிபா புலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

(அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.

(ஆ) கூற்று சரி, காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.

(இ) இரண்டுமே தவறு.

(ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்...