இந்தியா, மே 16 -- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இந்தத் தேர்வில் மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 4,35,119 மாணவியரும், 4,36,120 மாணவர்களும் அடங்குவர். இதில் 8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும். இது கடந்த ஆண்டு (மார்ச் / ஏப்ரல் 2024) தேர்ச்சி விகிதமான 91.55% உடன் ஒப்பிடும்போது 2.25% அதிகமாகும்.

பாலின வாரியான தேர்ச்சி விகிதத்தில், மாணவர்களை விட மாணவியரே சிறந்து விளங்குகின்றனர். இந்த ஆண்டு மாணவியரின் தேர்ச்சி விகிதம் 95.88% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.74% ஆகவும் உள்ளது. மாணவர்களை விட மாணவியர் 4.14% அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் மொத்தம் 15,652 மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

மேலும் படிக்க:- தலைப்பு செய்திகள்: '1...