இந்தியா, ஏப்ரல் 5 -- தவெக தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில். "ராணுவ அரசியலுக்கு வேண்டுமானால் 'Y' பிரிவு பாதுகாப்பு தேவைப்படுமே தவிர; மக்கள் அரசியலுக்கு தேவைப்படாது" என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார். திருவண்ணமலை மாவட்டம், செய்யாறுவில் பேசிய அவர், பாஜக-யில் நல்லவர்கள் மட்டுமே உள்ளனர் என்று அண்ணாமலை கூறுகிறார். மற்ற கட்சிகளில் இல்லையா? என்ற கேள்விக்கு "இது தம்பியின் நம்பிக்கை. அதை நாம் ஏன் கெடுக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

சீமான் மேலும் கூறுகையில், பாஜக-யின் அரசியல் கொள்கை இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது என்று விமர்சித்தார். "பசு மாடு,...