இந்தியா, மே 5 -- டிடிஎஃப் வாசன் மீதான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் படிக்க:- 'பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா?' ஆர்.எஸ்.பாரதி கேள்வி

சர்ச்சை யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஸ்போர்ட் வழங்குவதற்கு உத்தரவிடக் கோரி டிடிஎஃப் வாசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன், தனக்கு பாஸ்போர்ட் வழங்க கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, டிடிஎஃப் வாசன் மீது பல்வேறு வழக்கு...