இந்தியா, மார்ச் 12 -- தேசிய கல்விக் கொள்கையை விட சிறப்பாக செயல்படும் அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும்? வலுவான இருமொழி அடித்தளத்துடன் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (மார்ச் 12) அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டில் 58,779 பள்ளிகளில் 1.09 கோடி மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கின்றனர். 1,635 பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கின்றனர். எனவே தமிழ்நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. சிலர் கூறுவது போல், மூன்றாம் மொழியைக் கற்க வேண்டும் என்ற உண்மையான தேவை இருந்திருந்தால், எதற்காக மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தை தொடர்ந்து தேர்வு செய...