இந்தியா, ஜூலை 9 -- 'மக்களை காப்போம்.! தமிழகத்தை மீட்போம்.!' என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் தொடங்கி உள்ள நிலையில், 'Bye.! Bye.! Stalin' என்ற பெயரில் அதிமுக ஐடிவிங் புதிய பாடல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

'நான்காண்டு ஆட்சி, தமிழகத்தின் வீழ்ச்சி' என்ற தலைப்பில் அனிமேஷன் வீடியோ உருவாக்கப்பட்டு உள்ளது. ஹெல்மட் போட்டுக்கொண்டு சைக்கிளில் போட்டோ சூட் நடத்தும் ஸ்டாலினிடம் மக்கள், 'மின் கட்டண உயர்வு', 'கல்விக்கடன் தள்ளுபடி' 'விவசாயக் கடன் தள்ளுபடி', 'பெண்களுக்கு பாதுகாப்பில்லை', 'தாலிக்குத்தங்கம் என்னாச்சு' என்று கேள்வி எழுப்புவதாகக் காட்சிகள் வருகின்றன.

செந்தில் பாலாஜி கைது, போன்ற நிகழ்வுகள் எல்லாம் ஏஐ மூலம் சூப்பராக சித்தரிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என்ற வ...