இந்தியா, மார்ச் 16 -- 90 சதவீத அதிமுக தொண்டர்களின் மன ஓட்டத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து கேள்வி எழுப்பப்ட்டது.

அதற்கு பதிலளித்த அவர், தனிப்பட்ட காரணங்கள் காரணமாக செங்கோட்டையன் பதவியில் இல்லாமல் இருந்தார். பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கிய போது அமைச்சர் ஆனார். அம்மாவின் கட்சி பலவீனமாகி வருவதால் அங்குள்ள 90 சதவீத தொண்டர்களும் நிர்வாகிகளும் இயக்கம் வலுப்பட வேண்டும் என நினைக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் செங்கோட்டையன் மூலம் வெளிப்பட்டு இருப்பதாக நினைக்கிறேன்.

நாகரீகம், அநாகரீகம் பற்றியெல்லாம் அண்...