இந்தியா, ஏப்ரல் 17 -- Actor Sri: மாநகரம், வழக்கு எண் 18/9, வில் அம்பு, ஓநாயும் ஆட்டிக்குட்டியும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ. இவர் அண்மையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நிர்வாண வீடியோக்களையும், இன்னும் சில புகைப்படங்களையும் வெளியிட்டார்.

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீ தற்போது ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில், 'ஹலோ மக்களே. நான் புகை பிடிப்பதை விட்டு இன்றோடு ஒரு வருடம், நான்கு மாதங்கள், 16 நாட்கள் ஆகி இருக்கின்றன. அதற்காகத்தான் இந்த வீடியோ.. இதை சொல்வதன் மூல...