இந்தியா, மார்ச் 10 -- லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்து விட்டு, இளையராஜா இன்று சென்னை வந்தடைந்தார். அவரை வரவேற்க தமிழ்நாடு அரசு சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமான நிலையம் வந்தார். தமிழக பாஜக சார்பிலும் நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்ட இளையராஜா, பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

அதில் அவர் பேசும் போது, 'மிகவும் மகிழ்வான இதயத்தோடு, மலர்ந்த முகத்தோடு, நீங்கள் வழி அனுப்பி வைத்ததிலேயே, இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடிக்க, இறைவன் எனக்கு அருள் பாலித்து விட்டான். இது சாதாரணமான விஷயம் இல்லை. இசையை எழுதி விடலாம். அதை பார்த்து இசைக்கலைஞர்களும் வாசித்து விடலாம்.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 10 எபிசோட்: வெளியே கிளம்பிய ஜனனி தரப்பு.. கூனிக்குறுகும் குணசேகரன்! - க...