இந்தியா, பிப்ரவரி 23 -- அப்பா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பது வீணான வில்லங்கம் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு அதிமுகதான் இட ஒதுகீட்டை கொடுத்தது. அவர்கள் அரசு வேலையில் அமர அதிமுகவே காரணம். பர்மா பஜாரில் விற்கும் கப்பை வாங்கி ஸ்டாலினையும், சம்பந்தப்பட்ட அமைச்சரையும் ஒருவர் ஏமாற்றி உள்ளதே இந்த அரசின் சாதனை. விளையாட்டை ஊக்கப்படுத்த இந்த அரசு எதையும் செய்யவில்லை. இது குறித்து உதயநிதி ஸ்டாலின் உடன் விவாதிக்கத் தயார்.

திரும்பத் திரும்ப சொல்கிறேன், வீணாய் போன தினகரனை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நான் நாகரீகத்துடன் பேசுகிறேன். அவர் கடைபிடிக்கும் நாகரீகத்தின் அடிப்படையில்தான் நான் பதில் சொல்வேன். சேரக்கூடிய காலகட்டம் வரும் என அவர்கள் சொல்லலாம்.

இவர்கள் கெட் அவுட் மோடி என்றும் ...