இந்தியா, மார்ச் 21 -- வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், '' மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய திரையுலக பயணத்தில் ' வீர தீர சூரன் 'மிக முக்கியமான படமாக இருக்கும். இது போன்ற திறமையான நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியாது. எனக்கு கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க: விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் ஆடியோ லான்ச்.. எந்தெந்த பிரபலங்கள் பங்கேற்பு ? படங்கள் உள்ளே..

இது எனக்கு மிகப்பெரிய மேடை என நினைக்கிறேன். விக்ரம் சார் நடித்த படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்கிறேன். சினிமாவுக்காக அவருடைய அர்ப்பணிப்பு என்பது போற்றத்தக்கது. அவருடைய உழைப்பு... அனைவருக்கும் மோட்டிவேஷனலாக இருக்கும்.

என் வாழ்க்கைக்கு ஒரு காதல் பாடலை அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஜீ....