இந்தியா, ஏப்ரல் 23 -- அலெர்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் நிகழ்வு இன்று பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் தூய்மை பணியாளர்களை வைத்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர். பின், வனிதா, பிரஜன் உள்ளிட்ட நடிகர் பட்டாளங்கள் இந்தப் படம் குறித்த புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க| நடிகையிடம் அத்துமீறல்.. நடிகருக்கு இறுதி எச்சரிக்கையோடு வாய்ப்பும் கொடுத்த கேரள திரைத்துறை..

அப்போது, செய்தியாளர்களை சந்தித்து வனிதா விஜய குமார் பேசியுள்ளார். அதில், "பொதுவாக பெண்கள் முன்னேற்றம், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி தான் படங்கள் வருகிறது. இங்கு நிறைய பேர் பெண் என்ற அடையாளத்தை பயன்படுத்தி தவறுகளும் செய்கிறார்கள். அவர்களை மையப்படுத்தி தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. என் வாழ...