டெல்லி,சென்னை,சேலம், மார்ச் 25 -- அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் 2 மணி நேரத்திற்கு மேல் சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி இணையும் சூழல் உருவாகியுள்ளது. இந்த 2 மணி நேர சந்திப்பில் முக்கிய பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் எம்.பி., தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை குழுவாக சந்தித்த அமித்ஷா, அதன் பின் மற்றவர்களை அனுப்பிவிட்டு, எடப்பாடி பழனிசாமியுடன் நீண்ட நேரம் தனிமையில் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பரஸ்பரம் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டணிக்கான முக்கிய அம்சங்கள், கோரிக்கைகள் பற்...