இந்தியா, மார்ச் 8 -- 2 பிரதர்ஸ் பற்றிய படம் என்றும் தம்பி குடிகாரன் எனவும், அண்ணன் ரொம்ப சீரியஸான ஆளு என்றும் பெருசு பட விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேசியிருக்கிறார்.

பெருசு படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பெருசு படத்தைத் தயாரித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், ''நானும் ராம் சாரும் அடிக்கடி பேசிப்போம். அப்போது அவர் ஏதாவது இன்ட்ரஸ்டிங்கான ஒரு ஃபிலிம்ஸ் வந்துச்சுன்னா எனக்கு போன் பண்ணி சொல்வார். அப்படி தான் கூழாங்கல் பார்த்தோம். படம் ரொம்ப பிடிச்சிருந்துச்சு.

ஆனால், அந்தப் படம் நம்ம ஸ்டோன் பெஞ்சில் பண்ணமுடியல. அதுக்கப்புறம், விக்னேஷ் சிவன் கம்பெனி கூழாங்கல்லை பிரசென்ட் பண்ணுனாங்க.

அந்த மாதிரி ஒரு நாள் எனக்கு ராம் சார் போன் பண்ணி, இளங்கோ ராம்னு ஒரு இலங்கைக்காரர், சுயாதீனப்...