இந்தியா, மார்ச் 27 -- தமிழக மீனவர்கள் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இருதரப்பு மீனவர்கள் பேச்சுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 மீனவர்களை அவர்களின் விசைப்படகுடன் இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்குடன் சிங்களப்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் கைது செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் விடு...