இந்தியா, பிப்ரவரி 22 -- கடலூர் மாவட்டம், திருப்பயரில் தமிழ்நாடு பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அதில், ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை மனதார பாராட்டி இருக்கிறார்கள். ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். ஒன்றிய அரசு 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு தராமல் நிறுத்தி வைத்திருக்கிறது. இது 43 இலட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காகச் செலவு செய்யவேண்டிய தொகை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை என்பது, சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழு...