இந்தியா, மே 18 -- சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் 'மாமன். விலங்கு வெப் சீரிஸை இயக்கி கவனம் ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்தப்படம் மே 17 அன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தை பார்ப்பதற்காக நடிகர் சூரி கோவையில் உள்ள திரையரங்கிற்கு சென்று இருந்தார். அங்கு அவர் விஜயின் அரசியல் வருகை குறித்தான கேள்வி மட்டுமல்லாமல், மாமன் படம் குறித்தும் பேசினார்.

அங்கு அவர் பேசியதாவது, ' விஜய் சார் அரசியலுக்கு வந்திருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் என்னால் அவருடன் செல்ல முடியாது. செல்வதற்கான நேரமும் என்னிடம் இல்லை; நிறைய வேலைகள் இருக்கின்றன. விஜய் அண்ணன் அதை சூப்பராக செய்து கொண்டு சென்றிருக்கிறார்.' என்று ப...