இந்தியா, ஜூன் 13 -- மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்தது உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு அருகில் 11.6.2025 அன்று நடைபெற்ற அரசு விவசாய கண்காட்சி விழாவில், விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும், என்னைப் பற்றியும் பேசியுள்ளார்.

தலைவாசலில் சுமார் 1100 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ. 1,025 கோடி மதிப்பீட்டில், தென் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்காவை துவக்கி வைத்து, அதில் ஒரு பகுதியினை 22.2.2021 அன்று திறந்து வைத்தேன். இத்திட்டம் நிறைவ...